“இயக்குனர் சங்க அலுவலகத்தில் எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்கள்”: கரு.பழனியப்பன் குற்றச்சாட்டு

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 99-வது பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட்தாக அறிவிக்கப்பட்ட்து. இதற்கு சில இயக்குனர்கள் எதிர்ப்பு தெரித்த்தை அடுத்து, பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார்.

இது குறித்து ஆலோசிப்பதற்காக இயக்குனர் சங்கத்தின் 100-வது சிறப்பு பொது குழு கூட்டம் சென்னை கமலா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய தலைவர் விக்ரமன், பொருளாளர் பேரரசு, செயலாளர் ஆர்.கே. செல்வமணி, மற்றும் எஸ்பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சங்கத்தின் தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கரு.பழனியப்பன் பேசுகையில், “இயக்குனர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா, கடந்த முறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது உண்மை தான். அதற்காக அவரை சாமியாக கும்பிட அவசியம் இல்லை. யாராக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக க்ரீதியில் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “இது இயக்குநர் சங்க அலுவலகமா, கேளிக்கை விடுதியா என்று தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்கள் கிடக்கின்றன” என்றார் அவர்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்ட்து. முன்னணி இயக்குனர்கள் தலையிட்டு சலசலப்பை சரி செய்தனர். பின்னர் ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட்து.