“லோக்கல் சரக்கா, ஃபாரின் சரக்கா…”: ‘படைவீரன்’ படத்துக்காக தனுஷ் பாடிய பாடல்!

மணிரத்னத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில், EVOKE PRODUCTIONS ஏ.மதிவாணன் தயாரிப்பில் ‘படைவீரன்’ என்ற படம் உருவாகிவருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி  உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேளையில், சமீபத்தில் ‘படைவீரன்’ படத்தை பார்த்த நடிகர் தனுஷ், படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறினார். உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக் ராஜாவின் அருமையான டியூனுக்கு பிரியனின் வரிகளில்  “லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்தார் நடிகர் தனுஷ்.

ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் – சதீஷ் குமார், பாடல்கள் – தனா, பிரியன், மோகன் ராஜன், ஒலிவடிவமைப்பு – S. சிவகுமார், நடனம் – விஜி சதீஷ், சண்டை காட்சிகள் – தில் தளபதி, STILLS – A. ராஜா, PRO – நிகில்.