விஜய் பட வெளியீட்டில் சிக்கல்: திமுக எம்எல்ஏ பேச்சு!

ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் வெளீயிடும் டிஎன்எஸ் மூவி புரொடக்சன்ஸ் வழங்கும் ‘கககபோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்  கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இப்போது சிறு படங்கள், பெரிய படங்கள் என பாராபட்சம் பார்க்காமல் படங்கள் வெளியிடுவதில் பிரச்சனை வருகிறது. அதுபோல் தான் விஜய் நடித்த ‘தலைவா’ திரைப்படத்தை வெளியிட கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அதை கண்டு வருத்தமுற்ற நான், அந்த படத்தை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன். இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார். அதன் பின்னரே படம் வெளியானது.

இதுபோல நிறைய சின்னப் படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம், இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கப்பட்டு, சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசி எப்போதும் உண்டு.”

இவ்வாறு ஜெ.அன்பழகன் பேசினார்.

‘கககபோ’ திரைப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி, ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.

0a1r