‘கடவுள் இருக்கான் குமாரு’: திட்டமிட்டபடி 10ஆம் தேதி வெளியாகிறது!

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.

இப்படத்தை முதலில் நவம்பர் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிட திட்டமிட்டிருந்தனர். பின்னர் 10ஆம் தேதி (வியாழக் கிழமை) வெளியிட முடிவு செய்தனர்.

இதற்கிடையில், ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 10ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று புதிய மனு ஒன்றை விநியோகஸ்தர் தரப்பில் தாக்கல் செய்தனர்.

அந்த புதிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், 10ஆம் தேதி தான் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

எனவே, ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. திட்டமிட்டபடி 10 ஆம் தேதி (வியாழக்கிழமை) உலகெங்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகிறது.

Read previous post:
0a
கமல்ஹாசன் விதைத்துள்ள முற்போக்கு விதைகள்!

சில திரை ஆளுமைகள், பார்ப்பவர்களின் குணங்கள் மீது செல்வாக்கு செலுத்தி நற்குணங்களை விளைவிக்கவோ நீட்டிக்கவோ செய்வார்கள். நிஜத்தில் எப்படி என்பதை காட்டிலும் அவர் போதிக்க விரும்புவதை திரையில்,

Close