கொலை செய்யும் கொடூர சங்கிகள், அதை வீடியோ எடுத்து பரப்ப காரணம் இது தான்…

ஒரு கொலைகாரன் அவன் கொலை செய்வதை அவனே ஆள் வைத்து வீடியோ எடுப்பானா..? அவனே அதை சமூக வலைத்தளங்களில் பரப்புவானா..?

நாம் மாட்டுக்காக அடித்து துன்புறுத்தபடும் வீடியோக்கள் நிறைய பார்த்திருப்போம், நேற்று கூட “ஜெய் ஸ்ரீராம்” சொல்லச் சொல்லி இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அதுவும் கூட வீடியோவாக வெளிவந்துள்ளது

ஆனால் என்றாவது ஏன் அந்த வீடியோ எடுக்கப்படுகிறது என்று யோசித்திருப்போமா..??

மாட்டுக்காக கொலை செய்வது, ஜெய் ஸ்ரீராம்-க்காக கொலை செய்வது எல்லாமே criminal offence.

ஒரு கிரிமினல் குற்றத்தைச் செய்யப் போகும் குற்றவாளி ஏன் அதை வீடியோ ஆதாரத்துடன் செய்கிறான்? ஏன் அதை பொதுவெளியில் பரப்புகிறான்.?

பாஜக, ஆர்எஸ்எஸ் மேல்மட்ட தலைவர்கள் ஆதாரமில்லாமல் குற்றங்கள் செய்வதில் கில்லாடிகளாக இருக்கும்போது ஏன் அடிமட்ட தொண்டர்கள் இப்படி லுச்சாதனமாக மாட்டிக்கொள்கிறார்கள்?

கடலில் விழும் மனிதனின் சிறு காயத்திலிருந்து வரும் இரத்த வாடையை மோப்பம் பிடித்து சுற்று வட்டாரத்தில் உள்ள சுறா மீன்கள் அனைத்தும் அந்த மனிதனை நோக்கி நகரும்.

சாதாரண மீன்களுக்கு சுறா மீன்களைப் போல அத்தனை மோப்ப சக்தி கிடையாது, ஆனால் சாதாரண மீன்களாலும் சுறா மீனாக உருமாற முடியும் என்றால்..??

அதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது…

பாஜக -, கிரிமினல்களால் உருவான கட்சி, அதன் பொறுப்புகளில் உள்ள 90 சதவீத ஆட்கள் கிரிமினல் வழக்கு உடையவர்கள். தற்போதைய தேர்தலில் கூட தீவிரவாதி ப்ரக்யா சிங், சாத்வி, ஆஸ்திரேலிய குடும்பத்தை எரித்துக் கொன்ற சாது, மோடி, அமித்ஷா என எல்லாருமே பெருங்கண்ட தீவிரவாதிகள்.

இரத்த வாடையை மோப்பம் பிடிக்கும் சுறா மீன்களைப் போல பாஜகவின் அதிகாரப் பதவிகளை நோக்கி கிரிமினல்கள் நகருகிறார்கள், இதை பார்க்கும் சாதாரண மீன்களும் சுறா மீன்களாக உருமாற நினைப்பது தான் பிரச்சனை துவங்குமிடம்.

அதற்கு மிகவும் சரியான, பாதுகாப்பான offence மாடு, ஜெய்ஸ்ரீராம்-க்காக அடித்து துன்புறுத்துவது தான்.

கட்சியும் கண்டிப்பாக இந்த விசயத்தில் துணை நிற்கும், வீடியோவில் வரும் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படாததே இதற்கு சாட்சி.

இந்திய அளவில் வைரலானால் மோடி வரைக்கும் கூட கவனம் பெறலாம், அல்லது அட்லீஸ்ட் மாநிலத்திலாவது பிரபலம் ஆகலாம்.
கட்சிப் பொறுப்பு, பதவி, பணம் என செட்டில் ஆகலாம்.

வாக்கு வங்கியே இல்லாத தமிழ்நாட்டில் சிறு பதவியில் கூட இல்லாத எச்.ராஜாவே ஆயிரம் கோடிகளுக்கு மேல் சேர்த்திருக்கிறாராம்.
வானதி ஸ்ரீநிவாசன் கோடிகளைச் சேர்த்தது எல்லாம் ஆச்சரியமூட்டும் கதைகள். தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால் வடமாநிலங்களில் சொல்லவா வேண்டும்….

மாடு, நாடு, ராமன் என எதன் மீதும் இவர்களுக்கு அக்கறையெல்லாம் துளியும் கிடையாது. எல்லாம் பணம், பதவி.

சும்மா ரோட்ல போறவனை அடிச்சு கொன்றால் நோகாமல் பணம், பதவி புகழ் எல்லாம் கிடைக்கும் என்றால் மாட்டுமூளையர்கள் சும்மாவா விடுவார்கள்..

(பகிரி)

(Shared from Palani Periyasamy)

 

Read previous post:
0a1a
‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

'ராதாகிருஷ்ணன் பார்த்திபன்' என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக கோலோச்சி வரும் மிகவும் கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்த பிராண்ட் ‘வித்தியாசமான மற்றும் விதிவிலக்கான கற்பனைகள்'

Close