அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அதர்வா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த ‘இமைகா நொடிகள்’ படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு.

‘டிமான்ட்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துவரும் படம் ‘இமைக்கா நொடிகள்’.

இப்படத்தில் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் இது.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று (மே 17) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இதன் டீஸரை நாளை (மே 18) வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.