சிவகார்த்திகேயன் நடிக்கும் அறிவியல் புனைவு படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா!

சிவகார்த்திகேயன் ‘சயன்ஸ் ஃபிக்ஷன்’ எனப்படும் அறிவியல் புனைவு படம் ஒன்றில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாததால் ‘எஸ்.கே 14’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் சென்னையில் துவங்கியது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.டி.ராஜா, தனது 24ஏஎம் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படம் குறித்து ஆர்.டி.ராஜா கூறும்போது, “எங்கள் முந்தைய படங்களான ‘ரெமோ’ மற்றும் ‘வேலைக்காரன்’ வெற்றியின்  மகிழ்ச்சியை விட, இப்போது எங்களுக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளதாக உணர்கிறோம். ஒரு தயாரிப்பாளராக, ரவிக்குமாரின் மயக்கும் கதை சொல்லலை நான் உற்சாகமாக கேட்டேன். புதுமையான விஷயங்களை அசாதாரணமாக விவரிப்பதைக் கண்டு வியந்தேன். அதே சமயம், தயாரிப்பாளராக இந்த படத்தை நான் எப்படி வடிவமைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியும் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன.

உலகளவில் புகழ் பெற்ற  ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் அவர் மாய வித்தைகளைச் செய்ய  தவறியதில்லை.

நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்த ஃபேண்டஸி பொழுதுபோக்கு படத்தில் நகைச்சுவைக்கும் குறைவில்லை. கருணாகரன், யோகி பாபு, விஜய் டிவி புகழ் கோதண்டம் போன்ற உடனடியாக சிரிக்க வைக்கும் நடிகர்கள் இருக்கும்போது நகைச்சுவைக்கு வேறு என்ன தேவை? நடிகை பானுப்பிரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்” என்றார் ஆர்.டி.ராஜா

 

Read previous post:
0a1i
சைக்கோ வில்லனுடன் மோதும் சிபிஐ அதிகாரி நயன்தாரா: ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் – வீடியோ

கொடூரமான சைக்கோ வில்லனாக அனுராக் கஷ்யப்பும், அவரைத் துரத்தும் சிபிஐ அதிகாரியாக நயன்தாராவும் நடித்திருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மிரட்டலான' ட்ரெய்லர்:

Close