நடிகர் சங்க நிலம் விற்பனை ஊழல்: சரத்குமார், ராதாரவி மீது போலீஸ் வழக்குப்பதிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்கலத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.செல்வராஜ், முன்னாள் மேலாளர் நடேசன் ஆகியோர் அந்த நிலத்தை கடந்த 2006ஆம் ஆண்டு முறைகேடாக விற்று பணத்தை கையாடல் செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் விஷால் குற்றம் சாட்டினார்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விஷாலின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர் கூறியுள்ள புகாரில் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சரத்குமார், ராதாரவி, கே.ஆர்.செல்வராஜ், நடேசன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read previous post:
0a1i
சிவகார்த்திகேயன் நடிக்கும் அறிவியல் புனைவு படம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா!

சிவகார்த்திகேயன் ‘சயன்ஸ் ஃபிக்ஷன்’ எனப்படும் அறிவியல் புனைவு படம் ஒன்றில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாததால் ‘எஸ்.கே 14’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் சென்னையில்

Close