“நான் ஓட்டு சேகரிக்க அல்ல, சோறு சேகரிக்க வந்துள்ளேன்”: விவசாயிகள் மத்தியில் கமல் பேச்சு!

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில்  விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விவசாய சங்கத்தினர் பங்கேற்ற  இக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

மழைக் காலங்களில் வெள்ளச் சேதம் பெரும் பிரச்சனையாக உள்ளது. எனக்குத் தெரிந்த சில நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் குளங்கள், ஏரிகளை செப்பனிட என்ன செய்ய வேண்டுமோ அதற்கு உதவி செய்வார்கள்.

மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு, தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது?  அரசியல்வாதிகள் என்பவர்கள் தனியாக இல்லை, நம்மோடு தான் இருக்கிறார்கள்.

மழைகளையும், ஆறுகளையும் சாமியாகக் கும்பிடுங்கள். வைரத்தையும், தங்கத்தையும் பொடி செய்து சாப்பிட முடியாது. ஹைட்ரோ கார்பனையும் சாப்பிட முடியாது சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும். உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது.

நாம் கடந்த நாற்பது  ஐம்பது ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்து விட்டோம். இப்போது விழித்துக் கொள்ள வேண்டும். வேளாண் துறையை தொழில் துறை ஆக்கினால் தான் அனைவரும் வாழ முடியும். பல ஆண்டுகளாக விவசாயிகளின் தொல்லைகளையும், பெருமைகளையும் கேட்டு வளர்ந்தவன் நான்.
தலைவனை மக்கள் தேடக் கூடாது, நியமிக்க வேண்டும். ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்களாக இருக்கிறார்கள்.

என்னால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு உதவி செய்வேன். அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி. புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப் போல நான் உதவ வந்துள்ளேன். நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை, சோறு சேகரிக்க வந்துள்ளேன்.

உழவனின் மகன் இல்லையென்றாலும், உழவனின் மருமகன் நான்.

ஒருவர் டெல்லியில்  இருந்து என்னை ‘தமிழ் பொறுக்கி’ என்றார். நான் பொறுக்கி தான். அறிவு, ஞானம் என்றுவரும்போது நான் பொறுக்கிதான் என்பதை நான் ஏற்று கொள்கிறேன்.

இப்போது என்னை தேச துரோகி என்று சொல்லி, சுட்டுக் கொன்றுவிடலாம் என்று முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்தில் ஒரு ஆற்றை காணவில்லை. இது பற்றிய விவரங்களை ஓரிரு நாளில் வெளியிடுவேன்.
இவ்வாறு கமல் பேசினார்.
Read previous post:
0a1q
“கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்” கோட்சேவின் ‘இந்து மகாசபை’ கொக்கரிப்பு!

நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், “இந்தியாவில் இந்து தீவிரவாதம் இல்லை என்று இனியும் யாரும் கூற முடியாது” என்கிற ரீதியில்

Close