நீச்சல் உடை சர்ச்சை: ட்விட்டரில் ரசிகர்கள் – டாப்ஸி மோதல்!

வருண் தவானுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ள இந்திப்படம் ‘ஜுட்வா 2.’. இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸும் நடித்துள்ளார். நாயகிகள் இருவரும் நீச்சல் உடை அணிந்து போட்டிபோட்டு கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்காக நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படத்தை டாப்ஸி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டாப்ஸியின் இந்த கவர்ச்சி படத்தைப் பார்த்து சில ரசிகர்கள் பாராட்டியுள்ளபோதிலும் பல ரசிகர்கள் கேலியாக விமர்சித்துள்ளார்கள்.

“நீச்சல் உடை கூட எதற்கு? அதையும் கழற்றிவிட வேண்டியது தானே? உங்கள் சகோதரர் இதைப் பார்த்து நிச்சயம் பெருமைப்படுவார்” என்று ஒரு ரசிகர் டாப்ஸியின் ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் அடித்தார்.

இதற்கு பதிலளித்த டாப்ஸி, “சாரி… எனக்கு சகோதரர் இல்லை. இருந்தால் நிச்சயம் கேட்டிருப்பேன். சகோதரியிடம் கேட்டால் ஓகேவா?” என கேட்டிருக்கிறார்.

இன்னொரு ரசிகர், “கேவலமான படங்களில் நடித்து இந்த நாட்டு இளைஞர்களை கெடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்தபட்சம் சமூக உணர்வோடு இது போன்ற மோசமான குப்பை படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்கலாமே” என்ற கருத்தை பதிவிட்டார். இதற்கு டாப்ஸி, “குப்பையா? எனது உடம்பில் மணல் தான் ஒட்டிக்கொண்டு இருக்கிறது” என்று பதில் அளித்திருக்கிறார்.

 

Read previous post:
0a1e
துப்பறிவாளன் – விமர்சனம்

தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக

Close