தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அமலா பால்!

உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கையைவிட, தமிழ் திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தீவிரவாதச் செயல்கள் மிக மிகக் குறைவு. அப்படி இருந்தும் ஏன் இப்படி? தமிழ் இயக்குனர்களின் ‘மைண்ட் செட்’டும், கற்பனை வறட்சியும் தான் காரணம். “கதை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதில் ஒரு வில்லன் தேவையா? உடனே ஒரு தீவிரவாதியை இழுத்துப் போடு” என்பதாக உழன்றுகொண்டிருக்கிறது தமிழ் திரைப்பட இயக்க மனம்.

அப்படி தீவிரவாதத்தை மையமாகக் கொண்டு உருவாகிவரும் இன்னொரு படம் ‘முருகவேல்’. இதில் நாயகனாக வரும் சத்யராஜூக்கு இரு வேடங்கள். ஒன்று – தொழிலதிபர்: இன்னொன்று – தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அரசாங்கம் புதிதாக ஏற்படுத்தியுள்ள சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரி.

0a1f

இந்த படத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் ‘அஞ்சலி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாயகி அமலா பால். காமெடியான ஆட்டோ டிரைவராக வருகிறார் கஞ்சா கருப்பு. இவர்களுடன் ரம்யா நம்பீசன், பப்லு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது. நாகன் பிக்சர்ஸ் சார்பில் கே.குகன்பிள்ளை தயாரிக்கும் இப்படத்தை ஜோஷி இயக்கியுள்ளார். லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார்.

Read previous post:
0a1e
“எவன் நெனைச்சாலும் என்னை புடிக்க முடியாது!” – விஷால்

ஒரு நடிகர் நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டால், அவர் நடிக்கும் படத்தில் அவரை “வீரன்”, “சூரன்” என்று மற்றவர்கள் புகழ்ந்து பாடுகிற மாதிரி, அல்லது தன்னைத் தானே பெருமையடித்துக்

Close