கைது, 12 நாள் சிறை: “நடந்தது என்ன?” – விவரிக்கிறார் திலீபன் மகேந்திரன்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதல் காரணமாக இக்கொலையை செய்ததாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால், இது ஆணவக்கொலை என்றும், இக்கொலைக்கும் ராம்குமாருக்கும் சம்பந்தம் இல்லை என்றும், சுவாதியின் உறவினர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த சிலருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பதாகவும் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவந்தார்.

பல்வேறு வழக்குகளில் “தேடப்படும் குற்றவாளி”யான கருப்பு முருகானந்தம், இது தொடர்பாக கொடுத்த புகாரின்பேரில், திருவாரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திலீபன் மகேந்திரனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 12 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் திலீபன் மகேந்திரன் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.

தான் கைது செய்யப்பட்டது, சிறையில் வதைக்கப்பட்டது பற்றி திலீபன் மகேந்திரன் கூறியிருப்பதாவது:

ஒண்ணுமில்ல… நான் எதிர்பாத்ததுதான் நடந்தது…

அதாவது, போலீஸ் என்னை கைது பண்ணினது சென்னையில. ஆனா, வேளாங்கண்ணியில புடிச்சதா பதிவு பண்ணிருக்காங்க.

திருவாரூர்ல இருந்து சென்னை வர indigo car ஒண்ணு எடுத்துக்கிட்டு, 350 கிமீ வரை வந்து, என்னை 3 நாளா தேடி புடிக்கிறாங்க. மறுபடி சென்னையில இருந்து திருவாரூருக்கு அதே கார்ல புடிச்சிட்டு போறாங்க. போகும்போது, பாண்டிச்சேரியில ஒரு 5 star ஹோட்டல்ல பிரியாணி சாப்பாடு – எனக்கும் சேத்துதான். அன்னைக்கு மட்டுமே எனக்குத் தெரிஞ்சி 10 ஆயிரம் செலவாயிருக்கும். 3 போலீசு, ஒரு டிரைவர் வேற. 3 நாளா தேடுனாங்கன்னா எப்டியும் 30 ஆயிரம் செலவாயிருக்கும்.

எனக்கு ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தா நானே சென்னையில ட்ரெயின் ஏறி, நேரடியா திருவாரூர் வந்து, என்ன விஷயம்னு கேட்டிருந்துருப்பேன். நான் என்ன கொல குத்தமா பண்ணினேன் ஓடி ஒளியிறதுக்கு…?

100 ரூபாயில மேட்டர் முடிஞ்சிருக்கும். எனக்கு அந்த 100 ரூபாயும் தேவை இல்ல. இந்த 30 ஆயிரம் யாரு ஊட்டு சொத்து – இவங்க அழிக்க? நம்ம வரிப்பணம் இது. இது இருந்துருந்துச்சின்னா ஏழை குழந்தைங்க படிப்புச் செலவுக்கு உதவி இருக்கலாம்….

சரி… விஷ்யத்துக்கு வரேன்.

மொதல்ல என் மேல போட்ட வழக்கு 66 A IT Act. இந்த பிரிவு வழக்கை சட்டத்துல இருந்தே தூக்கிட்டாங்க. எதாவது வழக்கை பதிவு பண்ணியே ஆகணும்னு எல்லாரும் தேடுறாங்க.. கடைசியா போட்டது 66 D IT Act. அதாவது இது ரொம்ப சின்ன கேசுதான்…

என் மேல புகார் கொடுத்தது கருப்பு முருகானந்தம். அவரு மேல அவதூறு பரப்புனதா என்னை கைது பண்ணி. என்னை மாஜிஸ்ட்ரேட் முன்னாடி நிறுத்துனாங்க…

மாஜிஸ்ட்ரேட் போலீஸ் கிட்ட கேக்குறாரு: “கருப்புதான் abscant (தேடப்படும் குற்றவாளி) ஆச்சே… அவன் எப்படி புகார் குடுத்தான்? அத எப்படி நீங்க எடுத்தீங்க?” அப்படின்னு போலீஸ்கிட்ட கேட்டதுக்கு, அவுங்க சொன்ன பதில்: “சார், இவன் கொடிய எரிச்ச பய சார்.” இது கேள்விக்கான பதில் இல்லையே?

38 வழக்கு உள்ள ஒரு தேடப்படும் குற்றவாளி புகார் – அதுவும் பேஸ்புக்ல என்னை பத்தி தப்பா பேசுனான்னு அவதூறு வழக்கு – கொடுத்து, அதுக்கு உடனடியா ஆக்சனும் எடுத்த தமிழ்நாட்டு ஸ்காட்லாந்து போலீசை நான் வாழ்த்துகிறேன். இது அவனுங்க சொல்ற சட்டப்படியே குற்றம்..

அடுத்து, என் மேல போட்டது ரொம்ப சின்ன வழக்கு. own bail-லேயே என்னை விடணும்.. சூரிட்டி 7 நாளைக்குள்ள கொடுக்கலன்னாதான் என்னை 7 நாள் கழிச்சி ரிமாண்ட் பண்ண முடியும். இந்த மாஜிஸ்ட்ரேட் என்னத்த சட்டம் படிச்சாருன்னு தெரியல… ரிமாண்ட் பண்ணிட்டாரு…. இது அவனுங்க சொல்ற சட்டப்படியே குற்றம்…

அடுத்து, என்னை கைது பண்ணி திருச்சி சிறையில அடைக்கும்போது, சிறையிலேயே பல வருஷம் இருந்து பைத்தியம் ஆன கைதிங்க இருக்கிற தனிசிறையில 36 பேர்ல 37-ஆவது ஆளா தனி செல்லுல அடைச்சாங்க தனி அறை. ஜட்டி கிட்டி எல்லாத்தையும் அவுத்துட்டு ஒரு பெரிய வெள்ள டவுசர், ஒரு கிழிஞ்ச்சி போன டவுசர், ஒரு நஞ்ச டம்ளரு, ஒரு தட்டு… இத மட்டும் கொடுத்தாங்க. 24 மணி நேரமும் பூட்டிதான் இருக்கும். போர்வை கெடையாது. கொசு கடி. ஃபேன் கெடையாது. லைட்டு கெடையாது. கரெண்டு கெடையாது. 6 நாள் அந்த சிறையிலதான் கெடந்தேன். பெறவு வக்கீல் தோழர் கம்ருதின் மூலமா சண்டை போட்டு, என்னை high security block போட்டானுங்க..

ஏன் cp 1-ல போட்டீங்கன்னு கேட்டதுக்கு அவுங்க பதில், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காம்… அதனால பாதுகாப்பா அங்க வச்சாங்களாம். பாதுகாப்புக்கும், பனிஷ்மெண்ட்டுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியாது பாரு….! இதுவும் அவங்க சொல்ற சட்டப்படி குற்றம்…

என்னை கைது பண்ணின 26ஆம் தேதியே எனக்கு பெயில் கெடச்சிடுச்சி. ஆனா என்னை 12 நாள் ஜெயில்ல வச்சிருந்ததும் அவங்க சொல்ற சட்டப்படி குற்றம்….

அப்புறம், இந்த பயலுக என்னை வச்சி போட்டோஷாப் பண்ணி காமெடி பண்ணிட்டுருக்கானுங்க. மீடியா என்னைக்குடா உன்மைய சொல்லி இருக்கு…? நான் சொன்னது வேற; அவனுங்க பப்ளிஷ் பண்ணது வேற…! இவனுங்க அத புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கானுங்க….

என் மெயில் ஐடி, வாட்ஸப், பேஸ்புக் எல்லாம் என்னோட போன்ல logging இருந்துச்சி. இப்ப அது போலீஸ்கிட்ட இருக்கு… இப்படி இருக்கும்போது, அது எபப்டி RSS காரன் கையில போச்சி? என்னமோ அவனுங்க சாதனையா கண்டுபுடிச்ச மாதிரி ஸ்கிரீன் ஷாட் போட்டு பைத்தியக்காரத்தனமா பேசிட்டு இருக்கானுங்க…

சட்டம் தன் கடமையை செய்யிறத பாத்து எனக்கு புல்லரிச்சி போச்சி…!

இவ்வாறு திலீபன் மகேந்திரன் கூறியுள்ளார்.