கோவையில் இந்துத்துவா கலவரம்: “என்னங்க சார் உங்க சட்டம்…?”

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை கண்டிக்கத்தக்கது. இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று சொல்லப்படுகிறது. எதுவாயினும், உரிய முறையில் விசாரணை நடைபெற்று கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

இதற்கிடையில், இந்தக் கொலையைப் பயன்படுத்தி வழக்கம்போல் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் பெட்ரோல் குண்டுகள் வீசுவது, கடைகளைத் தாக்குவது என இந்துத்துவக் கும்பல் கலவரத்தில் இறங்கியுள்ளது.

பதற்றமான நிலையிலும், சசிகுமார் உடலை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு 10 கி.மீ தூரம் ஊர்வலமாக எடுத்துச் செல்ல காவல்துறை அனுமதித்துள்ளது. போகிற வழியெங்கும் வன்முறை செய்துள்ளனர் இந்து முன்னணியினர். தர்மபுரி இளவரசன் இறுதிச் சடங்கில் பங்கேற்க தலைவர்களுக்கு தடை விதித்து 144 போட்டதும் இதே காவல்துறை தான். தற்போது ராம்குமார் உடலை பார்ப்பதற்கு கூட அனுமதி மறுப்பதும் இதே காவல்துறை தான்.

என்னங்க சார் உங்க சட்டம்?

– ஆளூர் ஷாநவாஸ்

துணை பொதுச்செயலாளர், விசிக.