சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.900ஆக அதிகரிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது.
ஒரே ஆண்டில், அதாவது 9 மாதங்களில், நாட்டில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 285 ரூபாய் உயர்ந்துள்ளது, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது, தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1831.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.