சுரங்க ரயில் மேல நம்ம வண்டி எப்ப சவாரி போகுமோனு ஒரு புது கவலை…!

சென்னையில் வண்டி ஓட்டுறவுங்களுக்கு பொதுவாகவே நிறைய கவலைகள்…

ஷேர் ஆட்டோ கோடு போட்டுருமோனு கவலை…

பல்லவன் நம்ம ஒரு பக்கத்த தேய்ச்சிட்டு போய்ருவானோனு கவலை…

சிக்னல்ல முதல் ஆளா நின்னா, யாராவது பின்னாடி இடிச்சிருவாங்களோனு ஒரு கவலை..

சிக்னல் க்ரீன்ல இருக்கும்போது போனால்கூட, எந்த பக்கத்தில இருந்து எந்த வண்டி நம்ம மீது பாயுமோனு ஒரு கவலை…

கழிவு நீர் லாரி நம் மீது எப்ப கொட்ட போறாங்களோனு ஒரு கவலை..

இதுல இந்த டூ வீலர் ஹீரோக்கள் குடுக்கும் கட்டுக்களில் நமக்கு எங்க கட்டாகுமோனு ஒரு கவலை…

இப்ப நம்ப வண்டி, சுரங்க ரயில் மேல எப்ப சவாரி போகுமோனு ஒரு புது extra கவலை… அவ்வளவுதான்!!

ரா.ராஜகோபாலன்

 

Read previous post:
0
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்: பேருந்து, கார் கவிழ்ந்தன!

சென்னை அண்ணா சாலையில் ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நொடிகளில்

Close