வனத்துறை அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கும் ‘சாயா’!

சந்தோஷ் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘சாயா’. அவருக்கு ஜோடியாக  ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தின் நாயகியான காயத்ரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் நடித்த கௌதமி செளத்ரி  நடிக்கிறார். வனத்துறை அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ‘பிலால் மாலிக்’ சர்ச்சை புகழ் ஒய்.ஜி.மகேந்திரன், ‘பாய்ஸ்’ ராஜன், பாலாசிங், கராத்தே ராஜா, கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் வி.எஸ்.பழனிவேல்.

‘சாயா’ பற்றி இயக்குனர் வி.எஸ்.பழனிவேல் கூறுகையில், “சாயா’ என்பதற்கு ‘சக்தி நிறைந்த’ என்று பொருள். அந்த சக்தி நிறைந்த வார்த்தைக்கும்,  ஆத்ம சக்திக்கும் நல்ல  நோக்கத்திற்குமான தொடர்பு இருப்பதால் படத்திற்கு ‘சாயா’ என்று பெயரிட்டோம்.

“இதுவரை எடுக்கப்பட்ட பேய்ப் படங்களில் ஆவிகளைப் பற்றி மட்டும் பேசியுள்ளனர். பயம் காட்டுவதையும் சப்தங்களால் மிரட்டுவதையும் விட்டுவிட்டு இப்படம் புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும். ஆத்மாக்களின் நல்ல நோக்கம் இந்த சமுதாயத்திற்கும் மாணவர்களுக்குமான தேவையை நிறைவேற்றும் புதுமையான திரைக்கதையுடன் படம் பயணிக்கும்.

“வனத்துறை அதிகாரியாக வரும் சோனியா அகர்வால், காட்டிற்குள் நடக்கும் கடுமையான சண்டைக் காட்சிகளில் பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். அவருக்கு இப்படம் ஒரு மாறுபட்ட இமேஜை உருவாக்கித் தரும். தவிர, அவருக்கு ஆக்சன் ரூட் போட்டுக்கொடுக்கும் படமாகவும் இது உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குனர் வி.எஸ்.பழனிவேல்.

 ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் எஸ். பார்த்திபன். எடிட்டிங்கை ராஜ்குமார் கையாள, கலையை மாரியப்பன் கவனித்திருக்கிறார்.   பவர் பாஸ்ட்டின் சண்டைப் பயிற்சியிலும், ரமேஷ் கமல் நடனஅமைப்பிலும் உருவாகியுள்ளது ‘சாயா’. இதன் படப்பிடிப்பு பெரம்பலூரில் உள்ள பச்சைமலைப் பகுதிகளிலும், சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

Read previous post:
0a1c
பாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன் இயக்கும் ‘தப்பு தண்டா’!

இந்திய சினிமா உலகில் கனவுகளை காட்சிப்படுத்தும் கலைஞர்களில் ஒருவராக போற்றப்படுபவர் இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. யதார்த்த சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும், புகழும் அவருக்கு

Close