பாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன் இயக்கும் ‘தப்பு தண்டா’!

இந்திய சினிமா உலகில் கனவுகளை காட்சிப்படுத்தும் கலைஞர்களில் ஒருவராக போற்றப்படுபவர் இயக்குனர் – ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. யதார்த்த சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும், புகழும் அவருக்கு உண்டு.

அத்தகைய பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ பள்ளியில் பயின்று இயக்குனராகும் முதல் மாணவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஸ்ரீகாந்தன். இவர் தற்போது ‘தப்பு தண்டா’ படத்தை இயக்கி வருகிறார். ராஜன் – சத்ய மூர்த்தி தயாரிக்கும் இந்த படத்தில் ஏ.வினோத் பாரதி ஒளிப்பதிவாளராகவும், நரேன் பாலகுமார் இசையமைப்பாளராகவும், எஸ்.பி.ராஜசேதுபதி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

‘தப்பு தண்டா’ திரைப்படத்தின்  இயக்குனரான ஸ்ரீகாந்தனுக்கு, குறும்படங்களை எழுதி இயக்குவது என்பது கை வந்த கலை. அவருடைய குறும்படங்களான ‘அஃசப்டன்ஸ்’ மற்றும் ‘கலர்ஸ்’, பல மதிப்பிற்குரிய விருதுகளை அவருக்கு பெற்று தந்திருக்கிறது.

“நான் இயக்கிய ‘ஐடன்டிட்டி’ என்னும் குறும்படம் தான் என்னை இயக்குனர் பாலு மகேந்திராவிடம் அழைத்துச் சென்றது. பாலு சார் எனக்கு அளித்த ஊக்கமும், நம்பிக்கையும் தான் என்னை  ‘தப்பு தண்டா’ படத்தின் இயக்குனராக உருவாக்கி இருக்கிறது.

“பொதுவாகவே பாலு மகேந்திரா சாரின்  படம்  என்றால் யதார்த்தமாக தான் இருக்கும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆயினும் பாலு சாரின் ‘சதி லீலாவதி’  மற்றும் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படங்கள்  மக்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது. அந்த படங்களை இன்று பார்த்தால்கூட சிரிப்பிற்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது. அவரின் அந்த வழியை தான் நான் பின்தொடர்கிறேன்.

“கேமராவை ஆன் செய்யும்முன் என்னை உங்களது மனதில் நினைத்து கொள்ளுங்கள்” என்று பாலு மகேந்திரா சார் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையே தான் நான் இந்த ‘தப்பு தண்டா’ படத்தில் பின்பற்றினேன். இனி வரும் காலங்களிலும் பின்தொடர்வேன். என்றும் அவர் பெயருக்கு பெருமை சேர்க்கும் மாணவனாக நான் திகழ்வேன்” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் ஸ்ரீகாந்தன்.

இன்றைய நாளில் இயக்குனர் பாலு மகேந்திரா நம்மோடு இல்லை என்றாலும், அவரின் சீடர்களாகிய இயக்குனர்கள் பாலா, சீனு ராமசாமி, ராம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில், பாலு மகேந்திராவின்  சுவடுகள் இருப்பதை நாம் உணர்ந்து  வருகிறோம். அந்த வரிசையில் ‘தப்பு தண்டா’ படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்தன் விரைவில் இணைவார் என நம்பலாம்.

Read previous post:
0a3n
கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: மாடியிலிருந்து விழுந்ததால் கால் முறிந்தது!

கமல்ஹாசன் தற்போது ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தில் நடிப்பதோடு அதை இயக்கியும் வருகிறார். மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலாக அவர் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்திவிட்டு,

Close