படவிழாவில் காவல் துறையை விமர்சித்து பேசிய மாணவி வளர்மதிக்கு 15 நாள் காவல்!

டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி மாதம்  சென்னை வடபழனியில் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலரும், மாணவியுமான வளர்மதி, காவல் துறையை விமர்சித்து, வன்முறையை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, சேலம் பெண்கள் கிளைச் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கும் வளர்மதியிடம், படவிழா பேச்சு தொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்டு இருப்பதற்கான ஆவணங்களை கடந்த 26ஆம் தேதி வடபழனி போலீஸார் வழங்கினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வளர்மதி சேலத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் சைதாப்பேட்டை 17வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் அங்காள ஈஸ்வரி, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து வளர்மதி சென்னையிலிருந்து மீண்டும் சேலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

Read previous post:
0a1i
ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் பதிலடி!

கோவை அருகே ‘ஈஷா அறக்கட்டளை’க்காக சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்வேறு விதிகளை மீறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று வெள்ளியங்கிரி

Close