மோடி அரசுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம்: தமிழ்நாடு குலுங்கியது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழகத்தை வஞ்சிக்கும் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் இன்று, நாளை (திங்கள், செவ்வாய்) ஆகிய 2 நாட்கள் 48 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினரின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சியினர் உக்கிரமாக நடத்தும் இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தமிழ்நாடு குலுங்கியது.

பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.