விவேக் மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு

பிரபல நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் காலமானார் என்று நடிகர் மன்சூர் அலிகான் கருத்துத் தெரிவித்தார். அவரது இந்த கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

மன்சூர் அலிகானின் கருத்தை அரசு தரப்பு மறுத்ததோடு கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனையடுத்து, தொற்றுநோய் தடுப்பு, பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்துள்ளார் என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.