கொரோனா 2-வது அலை எதிரொலி: சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’ ரிலீஸ் ஒத்தி வைப்பு

உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை படுபயங்கரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் – குறிப்பாக தமிழகத்திலும் இதன் பாதிப்பு உக்கிரமாக இருக்கிறது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி திரையரங்குகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 சதவிகிதமாக குறைக்கப்படுவதாலும், வழக்கமான நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருப்பதாலும் திரையரங்க திரையிடல் காட்சிகள் கடுமையாக பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய தமிழ்ப்படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சசிகுமார் – சத்யராஜ் இணைந்து நடித்திருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாவதாக இருந்தது, தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. படக்குழுவின் இது பற்றிய பத்திரிகைச் செய்தி:-

0a1b

 

 

Read previous post:
0a1c
”கொரோனாவை கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்”: திருமா வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர்

Close