‘அயோக்யா’ விஷால்: ஃபர்ஸ்ட் லுக் வெளியிடு!

‘சண்டக்கோழி 2’ படத்தை அடுத்து விஷால் நடித்துவரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஆந்திராவில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது என்று கூறப்படுகிறது.

‘அயோக்யா’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால். இதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று (நவம்பர் 19) வெளியிடப்பட்டது. அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது.

இந்தப் படம், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.