இந்தர் குமார் தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம்: மகிழ் திருமேனி இயக்குகிறார்!

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரிக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.

முன்தினம் பார்த்தேனே, தடையறத் தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகின்றார்.

என்னை அறிந்தால், குற்றம் 23 போன்ற படங்களில் தனது தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களை கவர்ந்த அருண் விஜய் இப்படத்தில் புதிய பரிமாணத்தில் தோன்ற உள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் இவர் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.