அமெரிக்க கிளப்பில் சூதாடும் ரஜினிகாந்த்: சுனா சுவாமி கிண்டல்!
ஏற்கெனவே இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி, கவலைக்கிடமாகி, பின்னர் மீண்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கே அவர் முதன்முதலாக தனது செல்ஃபி வீடியோவை எடுத்துள்ளார். நல்ல உடல் நலனுடன் அவர் இருப்பது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. வீடியோவில் தன் ஓட்டுநருடன் ஃபெராரி காரில் வலம் வருகிறார் ரஜினிகாந்த். அப்போது ”இந்த ரெட் லைட்டைதானே ஆன் பண்ணணும்?” என்று அவரிடம் கேட்கிறார் ரஜினி.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவி வரும் அதேவேளை, அமெரிக்க சூதாட்ட கிளப்பில் (காசினோவில்) ரஜினிகாந்த் சூதாடிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.
இப்படம் குறித்து ட்விட் செய்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “வாவ்…! தன் உடல் நலத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரஜினிகாந்த் ஃபோர் ட்வொண்ட்டி, அமெரிக்க காசினோவில் சூதாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு டாலர்கள் எங்கிருந்து வந்தன என்பதை அமலாக்கத் துறை கண்டுபிடிக்க வேண்டும். (Wow! RK 420 in a US Casino gambling to improve his health!! ED must find out from where his $$ came from)” என்று கூறியுள்ளார்.