ஏ.ஆர். ரஹ்மானிடம் வாழ்த்து பெற்ற ‘லாலி லாலி ஆராரோ’ இசையமைப்பாளர்!

பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ்ராஜ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘லாலி லாலி ஆராரோ’. லிங்கன் ராஜாளி இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்துக்கு அறிமுக இசையமைப்பாளர் ராமகோபால கிருஷ்ணன் இசையமைக்கிறார். இவர் இளையராஜாவின் குரு டி.வி.கோபாலகிருஷ்ணனின் மகன் ஆவார்.

இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்து, தான் இசையமைத்த ‘லாலி லாலி ஆராரோ’ படத்தின் இசை ஆல்பத்தை அவரிடம் வழங்கினார் ராமகோபால கிருஷ்ணன்

ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.