ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் சினிமா துறையில் கால் பதிக்கிறது. சுஜாதா விஜயகுமாரின் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘அடங்க மறு’. சரண், மிஷ்கின், அமீர் ஆகிய இயக்குநர்களிடம் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

‘அடங்க மறு’ படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். ராஷி கண்ணா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ் இசையமைப்பில், ரூபன் எடிட்டிங்கில் படம் உருவாக உள்ளது. மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அடங்க மறு’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.