காலை 6 மணிக்கு திரைப்படம் திரையிட அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை அவற்றின் முதல் வாரத்திலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்களிலும் ஒரு நாளைக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகளைத் திருத்தியுள்ளது (காலை 6:00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2:30 மணி வரை காட்சிகள் திரையிடப்படும்). இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அது: