‘7  நாட்கள்’ திரைப்படத்தின் இசை: தனுஷ்  வெளியிட்டார்! 

மில்லியன் டாலர் மூவிஸ் நிறுவனம்  சார்பில் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘7 நாட்கள்’.

இயக்குனர் பி.வாசுவின்  மகன் சக்தி இதில் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்றும் அங்கனா ராய் நடிக்கின்றனர். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தின் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராம் இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரபு கணேஷன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் கோவிந்தபிள்ளை  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

இப்படத்துக்காக மதன் கார்க்கி எழுதி, டி.ராஜேந்தர் பாடிய “புடிச்சிருக்கா… பெண்ணே சொல்லிப்புடு” என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இசையை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை வருகிற மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.