‘கோட்சே’யர் ஆட்சியில் காந்தி படம் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு!

“காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்போம், கோயில் கட்டுவோம்” என பேயாட்டம் ஆடும் இந்துத்துவ பாசிச வெறியர்கள் ஆட்சியில், 2000 ரூபாய் நோட்டு காந்தி உருவப்படம் இல்லாமல் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10, 20, 50, 100, 500, 1000 என அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் உருவப்படம் பல ஆண்டுகளாக அச்சிடப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மத்திய மோடி அரசு கைவிட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு, அடுத்த வருடம் வெளியிட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மைசூர் கரன்சி அச்சகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, அவை வெளியிடங்களுக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும், அவற்றில் காந்தி உருவப்படம் இல்லை எனவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவல் உண்மையா, இல்லையா என எதுவும் சொல்லாமல், மோடி அரசும், ரிசர்வ் வங்கியும் மௌனம் சாதித்து வருகின்றன.