“சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்!”

எதிர்காலம் சோஷலிசத்திற்கே…

—————————————————-

#புரட்சி
ஆரம்பித்து விட்டது…
ஆம்;
ஆரம்பித்த #ரஷ்யப் #புரட்சி
#உலகையே #குலுக்கியது.

தொலைபேசி நிலையம்,
தந்தி அலுவலகம்,
வானொலி நிலையம்,
காவல் நிலையம்,
மின்சாரம், ரயில்வே, வங்கிகள்
கம்யூனிஸ்டுகளால் கைப்பற்றப்பட்டது.

யுத்தக் கப்பல் #அரோரா
குளிர்கால அரண்மனை மீது
பீரங்கியை திருப்பியது.

உலக சரித்திரத்தில்
முதன் முதலில்
தனக்கான அரசை
அமைத்தது மட்டுமல்ல;
தோளில் தூக்கிக் கொண்டு
குதூகலமிட்டது தொழிலாளி வர்க்கம்…

புரட்சியின் மறுநாளே
இரு சட்டங்களை நிறைவேற்றியது சோஷலிச அரசு.
40 கோடி ஏக்கர் நிலம் உழைப்பவன் கைக்கு மாறியது.

முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம்
என்கிற முழக்கம் நடைமுறையில் சாத்தியமானது.

ஈவிரக்கமற்ற முதலாளித்துவம் தற்போது மனிதநேய வேடம் போட்டு சதிராட்டம் ஆடுகிறது. இனிமேல் சோசலிசம் சாத்தியமில்லை என்று ஊளையிடுகிறது.

“சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம்”
என்று புரட்சியாளர் ரோஸா லக்ஸம்பர்க் அவர்களின்
எச்சரிக்கையை மனதில் கொள்வோம்.

கியூபா புரட்சியின் நாயகன் காஸ்ட்ரோ கர்ஜிப்பதை போன்று
“சோசலிசம் அல்லது வீரமரணம்”
என்பதை நினைவில் கொள்வோம்.

#எதிர்காலம் #சோஷலிசத்திற்கே #என #உரத்து#முழங்குவோம்

#tks

(ரஷ்ய போல்ஷ்விக் புரட்சியின் நூற்றாண்டு தினம் இன்று)