ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?: கமல் விளக்கம்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘2.0’. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் சுமார் 350 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போது அக்‌ஷய்குமார் வேடத்தில் நடிக்க முதலில் அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத சூழலில் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். ஆனால், கமல் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அக்‌ஷய்குமாரை வில்லனாக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு தொடங்கியது படக்குழு.

‘2.0’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கமல். “ரஜினியும் நானும் அதிகமான படங்களில் இணைந்து நடித்தோம். இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தோம். மீண்டும் இணைந்தால் அப்படத்தை இருவரும் இணைந்து தயாரிப்பது, அல்லது இருவரில் ஒருவர் தயாரிப்பது என்று முடிவு செய்தோம். அதனால் மட்டுமே ‘2.0’ படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை.

“மற்றபடி, வில்லன் வேடம் என்பதால் நான் ஒப்புக்கொள்ளவில்லை என்பது தவறு. நானே பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். தற்போது ‘2.0’வில் பெரிய நாயகன் தான் வில்லனாக நடித்து வருகிறார்” என்றார் கமல்.