வைரலாக பரவிவரும் விஜய் ஆண்டனியின் ‘எமன்’ பட பாடல்!

நடிகரும். இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடி, மிகவும் பிரபலம் அடைந்த  “நாக்க முக்க…”, “ஆத்திச்சூடி…” போன்ற பாடல்களின் வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது ‘எமன்’ படத்தின் “என் மேல கை வச்சா காலி…”  பாடல்.

‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ ராஜு மகாலிங்கம் தயாரித்துவரும் ‘எமன்’ படத்தை இயக்கி வருகிறார் ‘நான்’ படப்புகழ் ஜீவா ஷங்கர். இந்த படத்துக்காக விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும் “என் மேல கை வச்சா காலி…” பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம் சி (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.

“என் மேல கை வச்சா காலி… அந்துடும்டா உன்னோட தாலி…” என்ற வார்த்தைகளுடன் ஹிப் – ஹாப் தாளத்தில் ஆரம்பமாகும் பாடலை,  தனக்குரிய தனித்துவமான பாணியில் இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

திருநெல்வேலியில் ‘லைக்கா கோவை கிங்ஸ்’ மற்றும் ‘சேப்பாக் சூப்பர் கில்லிஸ்’  அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின்போது வெளியிடப்பட்ட “என் மேல கை வச்சா காலி…”  பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாடல் வீடியோ

https://youtu.be/5IBBanS1t00