“அஜீத் காட்டிய தவறான பாதையில் நடக்கும் விதார்த்”: மீரா கதிரவன் விளாசல் – வீடியோ

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு மீரா கதிரவன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘விழித்திரு’. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, டி.ராஜேந்தர், தன்ஷிகா, அபிநயா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்..

3 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவந்த இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு நாயக நடிகர்களில் ஒருவரான விதார்த் ஏனோ வரவில்லை.

இந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான மீரா கதிரவன், இப்படம் காலதாமதம் ஆனதற்கு முக்கிய காரணம் நடிகர் அஜீத் என்று குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும், அஜீத் தன் பட புரமோஷனுக்கு வருவதில்லை; அஜீத் ஆக விரும்பும் விதார்த் போன்ற நடிகர்கள், அஜீத்தை பின்பற்றி, தங்கள் பட புரமோஷனுக்கு வருவதில்லை. இவர்களுக்கு தயாரிப்பாளர்களின் வ்லி, வேதனை தெரிவதில்லை என்றும் விளாசினார்.

மீரா கதிரவன் பேச்சு – வீடியோ: