“நம் இளைஞர்களை இசையால் கவருவது எளிதான காரியம் இல்லை!” – விவேக்

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பி;, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் படம் ‘ரம்’.’வி ஐ பி’ புகழ் ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னை ‘ஹயாட்’ ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நடிகர்கள் ஆதவ் கண்ணதாசன், கோகுல் ஆனந்த் ஆகியோரும், படக்குழுவினர்களான தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா, இயக்குநர் சாய்பரத், இசையமைப்பாளர் அனிரூத், மற்றும் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், விவேக், அம்ஜத், அருண் சிதம்பரம், பாடகர் சிட் ஸ்ரீராம்,  பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஆகியோரும் பங்கேற்றனர்.

r3

“ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கிறது….நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிரூத். இளையராஜா என்னும் இசைக்கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்” என்றார் விவேக்.

“பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம். அதுமட்டுமன்றி, 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு நயம் தான். ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த ‘ரம்’, என்னுடைய 13 ஆவது படம். அதுவும் பேய் படம்” என்றார் அனிரூத்.

“ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட்டு, அதை வியாபாரம் செய்வது தான் மிகவும் கடினமான காரியம்….ஆனால் அந்த வியாபாரத்தை, தன்னுடைய கடின உழைப்பால் சிறப்பான விதத்தில் செய்து முடித்திருக்கும்  இளம் தயாரிப்பாளர்  ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திராவை பார்க்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது….இந்த ரம் திரைப்படம் அமோக வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்றார் ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா.

Read previous post:
r2
RUM Movie Audio Launch Photos Gallery

RUM Starring: Hrishikesh, Sanchita Shetty, Miya George, Narain and Vivek Produced by - Vijayraghavendra Directed by - Sai Bharath  

Close