பழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கன்னா காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகரும் பாஜக எம்.பி.யுமான வினோத் கன்னா காலமானார். அவருக்கு வயது 70.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அவருக்கு புற்றுநோய் பாதிப்பும் இருந்தது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை அவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த மன் கா பிரீத் என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார் வினோத் கன்னா. அமர் அக்பர் ஆண்டனி, குர்பானி, மேரே அப்னே உள்ளிட்ட  பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

பாலிவுட் திரையுலகின் பல்வேறு உயரிய விருதுகளையும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.