மீண்டும் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் விஜயகாந்துக்கு சிகிச்சை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். அதன்பின் சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர், கடந்த 9ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் தனது கட்சியின் வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று (புதன்கிழமை) மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்தனர். இதையடுத்து, உடல்நலம் தேறிய விஜயகாந்த் இன்று (வியாழக்கிழமை) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

 

Read previous post:
0a1g
வரி ஏய்ப்பு செய்தாரா?: சரத்குமாரிடம் 4-வது நாளாக விசாரணை!

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரிடம் வருமான வரி அதிகாரிகள் 4-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) தீவிர விசாரணை நடத்தினர். அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம்

Close