விஜய்யுடன் சேர்ந்து ‘மெர்சல்’ படம் பார்த்து பாராட்டிய கமல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு தமிழிசை, எச்.ராஜா சரமா, எல்.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற தமிழக பாஜக தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து, அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று மிரட்டலாய் கோரி வருகிறார்கள். அவர்களுக்கு தமிழகமே திரண்டெழுந்து செமத்தையாக பதிலடி கொடுத்து வருவதையடுத்து பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், “ஏற்கன்வே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மறுதணிக்கை செய்யக் கூடாது” என்று ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். உடனே கமலுக்கு விஜய் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர்கள் முரளி, ஹேமா ருக்மணி உள்ளிட்ட ‘மெர்சல்’ படக்குழுவினர் இன்று கமலை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது கமலுக்கு ‘மெர்சல்’ படம் பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது.

விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் சேர்ந்து இப்படத்தை பார்த்த கமல், படம் முடிந்தவுடன் “ரொம்ப நன்றாக இருக்கிறது” என்று பாராட்டினார். அவருக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தார்கள்.

0a1e