விஜய் படத்தின் தலைப்பு ‘எங்க வீட்டு பிள்ளை’யா?: படக்குழு விளக்கம்!

‘எங்கள் வீட்டு பிள்ளை’, ‘உழைப்பாளி’, ‘நம்மவர்’, ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள  பிரபல நிறுவனம் விஜயா புரொடக்க்ஷன்ஸ்.

இந்நிறுவனம் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதன் இயக்கத்தில், விஜய் நடித்துவரும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆகவே இப்படத்தை ‘தளபதி 60’ என படக்குழுவினர் அழைத்து வருகிறார்கள்.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமய்யா, ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

0a5u

‘தளபதி 60’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தின் தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்த தகவலை படக்குழு மறுத்துள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பி.வெங்கட்ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரடொக்ஷன்ஸ் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் விஜய்யின் ‘தளபதி 60’ படத்துக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

‘எங்க வீட்டு பிள்ளை’ என்னும் இத்தலைப்பை சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read previous post:
0a6f
பிரமாண்டமான ‘பாகுபலி-2’ படத்தை வெளியிடுகிறது புதிய நிறுவனம்!

உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’  வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிக

Close