பழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், கதை – திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவுமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பின்னிரவு 1.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடல் தகனம் இன்று மாலை 3 மணிக்கு மயிலாப்பூர் மயானத்தில் நடக்கிறது.

1970ஆம் ஆண்டு ‘வியட்நாம் வீடு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக நுழைந்தார் வியட்நாம் வீடு சுந்தரம். அவர்  எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

சிவாஜிகணேசன் நடித்த ‘வியட்நாம் வீடு’, ‘ஞானஒளி’, எம்ஜிஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ உட்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும், ‘கௌரவம்’, ‘விஜயா’, ‘தேவி ஸ்ரீகருமாரியம்மன்’, ‘ஞானப்பார்வை’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார்.

சமீபகாலமாக அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Read previous post:
0a5d
அணுத்தீமையறற உலகம் வேண்டுவோம்!

இன்று ஹிரோஷிமா தினம். 71 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் ஒரு மானுட பேரவலம் நடந்தேறியது. ஹிரோஷிமாவிலும் அதை தொடர்ந்து நாகாசாகியிலும் அணுகுண்டுகளை வீசி கொத்து கொத்தாக

Close