அணுத்தீமையறற உலகம் வேண்டுவோம்!
இன்று ஹிரோஷிமா தினம்.
71 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் ஒரு மானுட பேரவலம் நடந்தேறியது. ஹிரோஷிமாவிலும் அதை தொடர்ந்து நாகாசாகியிலும் அணுகுண்டுகளை வீசி கொத்து கொத்தாக லட்சம் மக்களை கொன்று குவித்தது அமெரிக்கா.
அணு ஆயுதங்களும், அணு உலைகளும் அன்பற்றவர்களால், அதிகாரப்பசி கொண்டவர்களால் மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கான ரத்த சாட்சியங்கள் ஹிரோஷிமாவும், புகுஷிமாவும்.
சக உயிரின் மீது அன்பு கொண்ட யாருமே இந்த பேரழிவு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.
மனிதம் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய இடம் ஹிரோஷிமா. உலக அமைதி என்பது வெற்று கோஷமாக இல்லாமல், அதிகாரப்பசிக்கு பலியான ஆயிரமாயிரம் ஆன்மாகளின் எளிய பிரார்த்தனையாகவும் அது இங்குதான் இருக்கிறது.
1947லிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹிரோஷிமாவில் கூடி அமைதி நினைவு தினத்தை கடைபிடிக்கிறார்கள். அணுத் தீமையற்ற உலகம் வேண்டி இன்று நாமும் அவர்களோடு இணைந்து கொள்வோம்.
– பூவுலகின் நண்பர்கள்