வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி விவசாயி சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த (ஆகஸ்ட்) 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்க சுற்றுகளில் அதிமுக முன்னிலையில் இருந்தது. திமுக இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும் இருந்தன.

ஆனால், ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் திடீரென முன்னிலைக்கு வந்தார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதன்பின் அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் முன்-பின் இருந்தாலும், கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். .

இறுதியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 4.85,340 வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.

சதவிகித கணக்கில் பார்த்தால், திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றுள்ளன.

 

Read previous post:
0a1a
கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது

திரைப்பட துறைக்கான 66-வது ஒன்றிய அரசு விருதுகள் இன்று (ஆகஸ்ட் 9) அறிவிக்கப்பட்டன.  நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் 'மஹாநடி' என்ற தெலுங்குப் படத்துக்காக சிறந்த

Close