நேர்கொண்ட பார்வை – விமர்சனம்

’நேர்கொண்ட பார்வை’யில் கொஞ்சம் சைடு வாங்கிய அந்த நீளமான சண்டை சீக்வன்ஸ், பஞ்ச் டயலாக், நாயகனின் பாத்திரப் படைப்பு, ஃப்ளாஷ்பேக் என முன்பே பயந்த பல விமர்சனங்கள் இருந்தாலும், இதை நாம் பற்றிக் கொள்ள வேண்டிய, பரவலாக கொண்டாட வேண்டிய காரணம் ஒன்றே ஒன்றுதான்.

ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலித்து, அதை அவள் ஏற்காமல் போனாலே ‘அவ கெட்டவ.. ஏமாத்திட்டா.. பொண்ணுங்களே இப்படித்தான்.. பசங்க பாவம்.. ஏமாத்துறா..’ என்று கண்ணீர் வடித்து பாட்டு பாடி கைத்தட்டல் வாங்கும் அதே சினிமாவில்..

அவள் குடித்திருந்தாலும், தனியாக ஒரு அறையில் இருக்க சம்மதித்தாலும், ஏ ஜோக் சொல்லி உன் தோளில் சாய்ந்து சிரித்தாலும், 19 வயதிலேயே தன் விர்ஜினிட்டியை இழந்திருந்தாலும், அவ்வளவு ஏன்.. காசு வாங்கிக்கொண்டு செக்ஸ்க்கு சம்மதித்து பின் மனம் மாறினாலும், அவள் வேண்டாம் என்றால் அது வேண்டாம் தான். அது ஒரு முற்றுப்புள்ளி. அதற்கு மேல் உனக்கு அவளைப் பற்றி பாட்டுப் பாட, கோபப்பட, வன்முறையை உபயோகிக்க, அத்துமீற எந்த உரிமையும் இல்லை என்று சொல்லியிருக்கிறது ’நேர்கொண்ட பார்வை’.

சுருக்கமாகச் சொன்னால், இத்தனை வருடங்களாக எத்தனையோ படங்கள் மூலம் (Exceptions நீங்கலாக) தலைமுறைகளின் மண்டைகளில் குத்திய முள்ளை, முள்ளாலேயே எடுக்கத் துவங்கியிருக்கிறது தமிழ் சினிமா. ’நேர்கொண்ட பார்வை’யை அனைவருக்கும் பரிந்துரைக்க இந்த ஒரு காரணம் போதும் எனக்கு!

JEYACHANDRA HASHMI