தயாரிப்பாளர் வினோத்குமார் – சிந்து திருமணம்!

திரைப்பட தயாரிப்பாளராகவும், வசந்த் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனருமாகவும் இருப்பவர் வி.வினோத்குமார். இவர் வசந்த் & கோ உரிமையாளரும், காங்கிரஸ் கமிட்டி துணை தலைவருமான எச்.வசந்தகுமார் – தமிழ்செல்வி தம்பதியரின் மகன் ஆவார்.

இவருக்கும், டாக்டர் சிவனையா – எழிலரசியின் மகள் சிந்துவிற்கும் திருமணம் நாகர்கோவில்,  தேரேகால் புதூர் கங்கா கிரான்ட்யுர் மகாலில் நடைபெற்றது.

இத்திருமண விழாவில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரனும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான அனில் சாஸ்திரி, தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், ஏராளமான  தொழிலதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Read previous post:
0a52
“திமுக சார்பில் ‘நிழல் அமைச்சரவை’ அமைக்க வேண்டும்!”

தி.மு.க.விற்கு ஒரு வேண்டுகோள்: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வலிமையான எதிர்க்கட்சி என்ற பொறுப்பை வழங்கியுள்ளனர். தி.மு.க.வின் மேல் மக்கள்

Close