சூர்யாவின் அடுத்த நாயகி கீர்த்தி சுரேஷ்?

சூர்யா தற்போது ‘எஸ் 3’ படத்தில் நடித்து வருகிறார். ‘எஸ் 3’ படத்துக்குப்பின் முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க படக்குழு சார்பில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

கீர்த்தி சுரேஷ் தற்போது ‘ரெமோ’, ‘விஜய் 60’ படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் ஜோடியாக இவர் நடித்திருக்கும் ‘தொடரி’ விரைவில் வெளியாகவுள்ளது.

அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட், பாட்டி செண்டிமெண்டை தொடர்ந்து அப்பா செண்டிமெண்டை வைத்து முத்தையா இப்படத்தின் கதையை எழுதியிருப்பதாக கூறுகின்றனர்.

கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.