வனமகன் – விமர்சனம்

தன் தந்தையின் நண்பர் பிரகாஷ் ராஜின் உதவி யுடன் சர்வதேச அளவில் தொழில் நிறுவனங்களை நடத்துகிறார் சாயிஷா சைகல். புத்தாண்டு கொண்டாட்டத் துக்காக அவர் தன் நண்பர்கள் மற்றும் தோழிகளோடு சேர்ந்து அந்தமானுக்கு செல்கிறார். வனப்பகுதியில் சாயிஷா குழுவினரின் கார் எதிர்பாராத விதமாக வனவாசியான ஜெயம் ரவி மீது மோதுகிறது. படுகாய மடைந்த ஜெயம் ரவியை காப் பாற்றியாக வேண்டும் என்ற சூழ்நிலையில் சாயிஷா குழு வினர் அவரை சென் னைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க் கின்றனர்.

காட்டில் இருக்கும் வன மனிதன், நாட்டில் இருக்கும் பண மனிதர்களைச் சந்தித்தால் என்னவாகும்? ஜெயம் ரவிக் கும் சாயிஷாவுக்கும் எப்படி காதல் மலர்கிறது என்பதாக நகர்கிறது கதை

காலமாற்றம், நகர வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம் எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் அவசியமே இல்லாமல் வனத்தில் மகிழ்ச்சியாக சுற்றி தெரியும் வனவாசிகளின் வாழ் வியலை காட்சிப்படுத்தி… கார்ப் பரேட் கலாச்சாரத்தால் சீரழி யும் இயற்கை, மறைந்து கொண்டிருக்கும் மனிதாபி மானம் என்று இயக்குநர் விஜய் எடுத்துக் கொண்ட களம் சுவையானதே… ஆனால், ‘குரோ கடைல் டண்டீ’, ‘டார்ஜான்’ போன்ற படங்களின் பாதிப்பு நிறைய!

நகர்ப்புற சுவடே தெரியாத கானகன் ஒருவன் நகர வாழ்க்கைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை ஜெயம் ரவியின் உடல் மொழிகளும், பார்வையும் நகைச்சுவையாய் முன்னிறுத்துகின்றன. சுவற்றை உடைத்துக் கொண்டு வீட்டுக் குள் செல்வது, மரத்தில் தூங்கு வது, துணிக் கடையில் பொம்மை மீது அம்பு எய்யப் பாய்வது, டிவியில் வரும் சிங்கம், புலியை வேட்டை யாடுவது, செல்போனில் வீடியோ காலை பார்த்து பிரமிப்பது என முதல் பாதியில் ஜெயம் ரவியின் நடிப்பில் திரையரங்கில் அதிர் சிரிப்புகள். வசனமே பேசாமல், உடல் மொழியின் மூலம் நடிப்பில் கவர்கிறார். ஆனாலும் இந்த காட்சியமைப்புகள் பழங்குடி யினத்தின் சமகால பிரச்சினை களையோ, உணர்வுகளையோ பேசுவதற்கு பதிலாக வெறும் சிரிப்புக்காகவே பயன்படுத்தப் பட்டது பலவீனம்.

நாயகி அழகாக இருக்கிறார். நாயகனைவிட கூடுதலாகவே திரையை (போரடிக்காமல்) ஆக்கிரமிக்கிறார்.

பிரகாஷ்ராஜ் எப்போதும் போல ஆரம்பத்தில் நல்ல வராக தோன்றி வில்லனாக மாறுகிறார். வனவாசி கதா பாத்திரத்தில் வேல.ராமமூர்த்தி கச்சிதமாக மிளிர்கிறார். சமீ பத்திய படங்களில் ‘மைண்ட் வாய்ஸ்’ வழியே நடித்து வந்த தம்பிராமையா, காமெடிக் காட்சிகளில் சிறப்பான பங் களிப்பை அளித்திருக்கிறார்.

வனம், நகரம் இரண்டையும் தன் சிறப்பான ஒளிப்பதிவால் பிரதிபலித்திருக்கிறார் திரு நாவுக்கரசு. ஹாரிஸ் ஜெய ராஜின் 50-வது படம். தனி யாகச் சொல்ல எதுவும் இல்லை. கலை இயக்குநர் ஜெயயின் கைவண்ணமும், ஆன்டனியின் எடிட்டிங்கும் பலம்.

சாயிஷா மலையில் இருந்து கீழே தவறி விழும் காட்சி, ராணுவத்தினரோடு புலி சண்டை போடும் இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள்… இந்த ‘பாகுபலி’ காலத்துக்கு கொஞ் சம் அப்படி இப்படித்தான்!

படத்தின் இரண்டாம் பாதி தொடங்கும்போதே பிரிந்த தன் பழங்குடிகளோடு மீண்டும் ஜெயம்ரவி சேர்ந்துவிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி கனமான காட்சிகளால் கடத்தாமல், சுற்றி வளைத்துக் கொண்டு போனது சற்று ஆயாசம்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி பழங்குடிகளின் உணர்வையும், வலியையும் ஆழமாக பதிவு செய்திருந்தால் வனமகன் வசீகரம் கூடியிருக்கும்.