“பேசியே கட்சியை அழிக்கத் தொடங்கியிருக்கிறார் வைகோ!”

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் நாதஸ்வரம் ஊதப்போகலாம் என்றும், ஆதித்தொழில் செய்யலாம் என்றும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அவற்றில் சில:

# # #

எவிடென்ஸ் கதிர்: பேசியே கட்சியை வளர்த்த இயக்கம் தி.மு.க.என்று சொல்லுவார்கள். ஆனால் சில சமயம் பேசாமலும் கட்சியை வளர்க்க முடியும் என்று கலைஞர் அவர்களுக்கு தெரிகிறது.அதனால்தான் அமைதியாக இருந்தே ஸ்கோர் செய்கிறார்.ஆனால் வைகோ பேசியே கட்சியை அழிக்க தொடங்கி இருக்கிறார்.

# # #

ரவிகுமார்: சாதியின் பெயரால் ஒருவரை இழிவுசெய்வதை எந்தவிதத்திலும் ஏற்கமுடியாது.

# # #

பாரதி தம்பி: கலிங்கப்பட்டி டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் திருமாவளவனை ‘திருமாவளவன், நீங்க வாயை மூடுங்க’ என்று அதட்டிய வைகோ இப்போது, கருணாநிதி குலத்தொழிலை செய்யலாம் பரிந்துரைக்கிறார். அதை சொல்லும்போது அவரது உடல்மொழியில் வெளிப்படுவதன் பெயர்தான் ஆண்டை சாதித் திமிர். வைகோ தன் அழிவு காலத்தின் இறுதியில் இருக்கிறார். துயரம் என்னவென்றால் அவர் தன்னை மட்டும் அழித்துக்கொள்ளவில்லை. தன்னுடன் சேர்த்து இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் புதைகுழியில் தள்ளுகிறார்.

# # #

துரை அரசு: கூடவே இருக்காங்களே செவ்வாழைகள்…
அவங்க வாயைத் தொறக்கறாங்களா?

எதைப் பேசணுமோ…
அதைப் பேசணும்…

எதைப் பேசக்கூடாதோ…
அதை நினைக்கவே கூடாது.

ஒருங்கிணைப்பாளராக ஜி.ராமகிருஷ்ணன் அல்லது திருமாவை அமர்த்துங்கள்….

# # #

ராஜசங்கீதன்: ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்.

ஈழத்துல போர் கடுமையா நடந்துக்கிட்ட இருந்த நேரம். இந்தியாவோட தலையீட்ட விமர்சிச்சும் அதை கண்டிக்காம கூட்டணில முட்டுக்கொடுக்கற திமுகவையும் கண்டிச்சும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துனாங்க. சட்டக்கல்லூரி மாணவர்களும் களத்துல குதிச்சாங்க. ஆனா நம்ப தலீவரு கொஞ்சம்கூட அலட்டிக்கவே இல்ல. சின்னதா ஒரு போலீஸ் தடியடி, ஒரு சிட்டிகை சாதி பிரச்சினை. அவ்வளவுதான். மொத்த போராட்டத்தையும் திசை திருப்பிட்டாரு.

வைகோ சொன்னது தப்புதான். ரொம்ப தப்புதான். ஆனா, கடந்த ரெண்டு மூணு வாரத்துல பாருங்க. மக்கள் நல கூட்டணிய தேவையில்லாத பிரச்சனைகள்ல மாட்டிவிட்டு, தேமுதிகவ ஒடச்சி தேர்தல் நேரத்துல சம்பந்தமில்லாத பிரச்சனைகள பேச வச்சது யாரோட வெற்றி?

நானும் இந்த வழக்கமான ‘சுழித்து ஓடும் நீரலை’யில் சிக்கிக்கக் கூடாதுன்னுதான் நெனச்சுக்கிட்டிருந்தேன். பட், முடியல. கட்டுமரத்தோட திருகுவேல அப்படி.

நம்ம பேச வேண்டிய பிரச்சின, கூடங்குளத்துல அணு உலைய கொண்டு வந்தவங்கள திரும்ப தேர்ந்தெடுக்கப்போறோமோ, கெயிலுக்கு கையெழுத்து போட்டவங்கள திரும்ப கொண்டு வரப்போறோமோ, வீட்டு ஹால் வரைக்கும் செம்பரம்பாக்கம் தண்ணிய வர வச்சி காது கொடஞ்சிக்கிட்டிருந்தவங்கள தேர்ந்தெடுக்கப்போறோமா, என்றைக்கும் இல்லாம இப்போ அதிகமா இருக்குற சமூக பிரச்சினைகள் மற்றும் இயற்கை, வாழ்வாதார பிரச்சினைகள்ல இந்த தேர்தல் அரசியல் கட்சிகளோட நிலைப்பாடு என்ன போன்றவைதான்.

நல்ல யோசிச்சி பாருங்க. வடிவேலு ஜோக்குகள வச்சி தேர்தல் பிரச்சாரத்த ஆரம்பித்தன இரண்டு பெருங்கட்சிகளும். சந்தி சிரித்தது. மக்கள் நலக் கூட்டணியின் திட்டங்கள் பார்த்து வேற வழியில்லாம அன்புமணி கூட Joyce Meyer பாணியில் ஸ்டேஜ்ல நடந்து மண்டல மண்டலமா தமிழ்நாட define பண்ணி திட்டங்கள் அறிவிக்க நேர்ந்தது. திமுக, அதிமுக சீன்லயே இல்ல. ஏன்னா அப்படி திட்டங்கள் எதுவும் அவங்க கைவசம் இல்ல. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எரிஞ்ச கல்ல பொறுக்கி சத்தமே இல்லாம மக்கள் நலக் கூட்டணின்னு ஒரு க்ரூப் ஸ்ட்ராங்கா சுவர் எழுப்பியத ரொம்ப லேட்டா கவனிச்சாங்க. அதனால, இப்ப பத்த வைக்கிற வேல பாக்குறாங்க. இதுக்கும் சேர்த்துவச்சுதான் ரிசல்ட் அவங்களுக்கு வரப்போகுதுங்கறது வேற விஷயம்.

விஜயகாந்த்துக்கு தைராய்ட் இருக்குறதோ, பிரேமலதா தண்ணியடிக்கிறதோ, டிவி இண்டெர்வியூவில வைகோ walk out பண்றதோ, முத்தரசன், திருமா தூங்கி வழியிறதோ நம்ம பிரச்சனை இல்ல. இந்த வருடம் வெயில் அதிகமா இருக்க போகுது. குடிக்க தண்ணி கிடையாது. அதே நேரம், பருவமழை அதிகமா பெய்ய போகுது. நீர்த் தேக்கம் கிடையாது. செய்யூர்ல பவர் பிளாண்ட் வரப்போகுது. பெட்ரோல் விலை கடந்த பத்து நாள்ல 5 ரூபா ஏறியிருக்கு. சாதிவெறிக்கு புருஷன வெட்டக் கொடுத்துட்டு ஒரு புள்ள வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்குது. அடுத்த வருஷமும் ஜல்லிக்கட்டு நடக்காது. மீனவப்படகுகள இலங்கை பிடிச்சி வச்சிக்குது. இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி கொடுக்குது. சென்னை காத்து அதிக மாசு கொண்டிருக்கிறதா ஒரு புள்ளி விவரம் சொல்லுது.

என்ன பண்ணலாம் சொல்லுங்க? கட்டுமரமா, மாண்புமிகு தங்கத்தாரகை புரட்சித்தலைவி எட்சட்ராவா? வழக்கம்போல, கமர்சியல் ப்ரேக் பார்க்க தொடங்கி, பார்க்க வந்த சினிமாவ தொலைக்குற தமிழ்குடியே.. மறுபடியும் மெயின் பிக்சர்லருந்து டீவீயேட் ஆயிடாத. பயங்கரமான ஸ்க்ரிப்ட் ரைட்டரும் நடிகையும் நடமாடும் ஊரு இது.

பை தி வே, வைகோ கொஞ்சம் அமைதியா இருக்கிறது நல்லது. அப்படி பேசினது ரொம்ப தப்பு. ஆழ்ந்த கண்டனங்கள். அப்படியே திருமா டேக் ஓவர் பண்ணா பெட்டர். சரி பண்றோம்னு நெனச்சு தயவு செஞ்சி கேப்டன்கிட்டயோ கேப்டிகிட்டயோ கண்ட்ரோல கொடுத்துடாதீங்கப்பா!