நவம்பர் 7-ல் கட்சி தொடங்க மாட்டேன்: கமல்ஹாசன் அறிவிப்பு!

“அரசியலில் நிச்சயம் குதிப்பேன். மக்கள் விரும்பினால் முதல்வர் பதவியை ஏற்கத் தயார்” என்றெல்லாம் ஏற்கனவே முழங்கி முடித்துவிட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி பிறந்த நாள்.

தனது பிறந்த நாள் அன்று கமல் புதிய கட்சி தொடங்குவார், கட்சியின் பெயர் அறிவிப்பார், கட்சிக் கொடியின் வடிவமைப்பை வெளியிடுவார், கட்சியின் கொள்கைகளை பிரகடனம் செய்வார் என்கிற ரீதியில் சில ஊடகங்கள் யூகச்செய்தி வெளியிட்டன.

ஆனால், தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் எப்போது வரும் என்று திட்டவட்டமாக தெரியாத நிலையில், இப்போதே கட்சி தொடங்கி சீரழிய கமல் என்ன விவரம் தெரியாதவரா?

அதனால், நவம்பர் 7-ல் கட்சி அறிவிப்பு இல்லை என்று கமல் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7 இயக்கத்தார் கூடுவது எம் பல வருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்” என்று கூறியுள்ளார்.

 

Read previous post:
0a1d
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிய பினராயி விஜயனுக்கு ‘கேரள பெரியார்’ விருது!

பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சராக்கி, வழிபாட்டுத் தலங்களில் சமத்துவத்தை உறுதிப்படுத்தியது,

Close