பா.இரஞ்சித்  இயக்கிய ‘மகிழ்ச்சி’ பாடல் தொகுப்பு  வெளியீடு

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல், தெருக்கூத்து, தனியிசைக் கலைஞர்கள் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, சிலம்பாட்டம், இதுவரை மேடையேற்றப்படாத பல கலைஞர்கள் கலந்துகொண்ட பல கலைகள் ஆகியவை நிகழ்த்தப்பட்டன.

மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். கடைசி நாள் நிகழ்வில் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினர் இசையமைத்துப் பாடிய “மகிழ்ச்சி” இசை ஆல்பம் வெளியிடப்பட்டது

இந்த பாடல் தொகுப்பில் எட்டு பாடல்கள்  இடம் பெற்றுள்ளன இசையமைப்பாளர்  தென்மா  இசையமைத்துள்ளார் . இதில் “மகிழ்ச்சி…” என்கிற பாடலை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். நடன இயக்குனர் சாண்டி குழுவினர் இதில் நடனமாடியுள்ளனர். நடிகர் கலையரசன், ஜானி, லிங்கேஸ் உள்ளிட்டோரும் இதில் நடனமாடியுள்ளனர், இந்த பாடல் தொகுப்பை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சி குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில், “நமது சமூகத்தில் ஏற்றத்தாழவு, சாதி, வர்க்கம் என்று சமத்துவமில்லாத மனிதர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடையே இருக்கும் பிரிவினைகளை அகற்ற, நமது கலைகள் வழியாக ஒரு மாற்றத்தை உண்டுபண்ண நமக்குள் இருக்கும சாதி, மதம், வர்க்கம் இவற்றை களைந்து சமத்துவமாக இந்த புத்தாண்டை கொண்டாடவே இந்த நிகழ்ச்சி. வெற்றிகரமாக இது நடந்துமுடிந்தது பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போன்ற சமத்துவ விழாக்களை நாம் நடத்துவோம்” என்றார்.

 

Read previous post:
0a1a
“மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவேன்”: பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

இந்த ஆண்டு ஏப்ரல் / மே-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அறிவித்துள்ளார். பிரகாஷ்ராஜ், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான,

Close