அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகிறது ‘உறுதிகொள்’!

ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘உறுதிகொள்’. இயக்குனர் ஆர்.அய்யனார் இயக்கியிருக்கும் இந்த படத்தில், ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடித்துள்ளார்.

நாயகியாக மேகனா நடித்துள்ளார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் அதிரடியாக சண்டை காட்சிகள் இருப்பதால் தணிக்கை குழுவினர் இத்திரைப்படத்திற்கு  U/ A சான்றிதழ் வழங்கி உள்ளனர். படம் அக்டோபர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

Read previous post:
0a1d
விக்ரம் – தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகிறது!

விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'ஸ்கெட்ச்'. இதில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்..

Close