விக்ரம் – தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகிறது!

விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் விக்ரமுடன் தமன்னா, ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.. தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்துவரும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து இப்படத்தின் டீசர் வருகிற தீபாவளி அன்று (அக்டோபர் 18ஆம் தேதி) வெளியிடப்பட உள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்…